Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:157 — கால்நடை

அன்றியும், “எங்களுக்கும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களை விடவும் நாங்கள் சிறப்பாக வழி நடத்தப்பட்டிருப்போம்,” எனவும் உங்களால் கூற முடியாது. ஒரு வழிகாட்டியாகவும், மேலும் ஒரு கருணை யாகவும், ஒரு நிரூபிக்கப்பட்ட வேதம் உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இப்பொழுது வந்துள்ளது. இப்பொழுது கடவுள் - இடமிருந்துள்ள இந்த சான்றுகளை நிராகரிப்பவனையும், மேலும் இவற்றை அலட்சியம் செய்பவனையும் விட மிகத் தீயவன் யார்? நம்முடைய சான்றுகளை அலட்சியம் செய்பவர்களை, அவர்களுடைய கவனக்குறை விற்காக மிக மோசமான தண்டனைக்கு நாம் உட்படுத்துவோம்.

[6:156] “இப்பொழுது, எங்களுக்கு முன்னிருந்த இரு கூட்டத்தாருக்குதான் வேதம் இறக்கப்பட்டது, மேலும் அவற்றின் உபதேசங்களை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்,” என்று இனிமேலும் நீங்கள் கூற முடியாது.

[6:158] அவர்களிடம் வானவர்களோ அல்லது உம்முடைய இரட்சகரோ அல்லது உம்முடைய இரட்சகரின் சில நேரடி வெளிப்பாடுகளோ வருவதற்காக அவர்கள் காத்திருக்கின்ற னரா? இது நிகழும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி அதன் மூலம் நம்பிக்கையின் பலன்களை அறுவடை செய்து கொள்ளாத எந்த ஓர் ஆன்மாவும் அப்போது நம்பிக்கை கொள்வதன் மூலம் பலன் அடைய முடியாது.* “காத்துக்கொண்டிருங்கள்; நாங்களும் காத் திருக்கின்றோம்” என்று கூறுவீராக