குர்ஆன் 6:158 — கால்நடை
அவர்களிடம் வானவர்களோ அல்லது உம்முடைய இரட்சகரோ அல்லது உம்முடைய இரட்சகரின் சில நேரடி வெளிப்பாடுகளோ வருவதற்காக அவர்கள் காத்திருக்கின்ற னரா? இது நிகழும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி அதன் மூலம் நம்பிக்கையின் பலன்களை அறுவடை செய்து கொள்ளாத எந்த ஓர் ஆன்மாவும் அப்போது நம்பிக்கை கொள்வதன் மூலம் பலன் அடைய முடியாது.* “காத்துக்கொண்டிருங்கள்; நாங்களும் காத் திருக்கின்றோம்” என்று கூறுவீராக
[6:157] அன்றியும், “எங்களுக்கும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களை விடவும் நாங்கள் சிறப்பாக வழி நடத்தப்பட்டிருப்போம்,” எனவும் உங்களால் கூற முடியாது. ஒரு வழிகாட்டியாகவும், மேலும் ஒரு கருணை யாகவும், ஒரு நிரூபிக்கப்பட்ட வேதம் உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இப்பொழுது வந்துள்ளது. இப்பொழுது கடவுள் - இடமிருந்துள்ள இந்த சான்றுகளை நிராகரிப்பவனையும், மேலும் இவற்றை அலட்சியம் செய்பவனையும் விட மிகத் தீயவன் யார்? நம்முடைய சான்றுகளை அலட்சியம் செய்பவர்களை, அவர்களுடைய கவனக்குறை விற்காக மிக மோசமான தண்டனைக்கு நாம் உட்படுத்துவோம்.
[6:159] எவர்கள் தங்களையே பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கின்றனரோ அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது, பின்னர் அவர் கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார்.