குர்ஆன் 6:162 — கால்நடை
கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.
[6:161] “என்னுடைய இரட்சகர் என்னை நேரான பாதையில் வழி நடத்தியிருக்கின்றார். ஆப்ரஹாமுடைய சரியான மார்க்கம், ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடுபவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.
[6:163] “அவருக்குப் பங்குதாரர்கள் இல்லை. நான் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கட்டளை யிடப்பட்டுள்ளது இதுவே ஆகும், மேலும் அடிபணிவதில் நான் முதன்மையாக இருக்கின்றேன்.”