குர்ஆன் 6:163 — கால்நடை
“அவருக்குப் பங்குதாரர்கள் இல்லை. நான் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கட்டளை யிடப்பட்டுள்ளது இதுவே ஆகும், மேலும் அடிபணிவதில் நான் முதன்மையாக இருக்கின்றேன்.”
[6:162] கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.
[6:164] “எல்லாவற்றிற்கும் இரட்சகராக அவர் இருக்கும் போது, கடவுள் அல்லாத மற்றவற்றை இரட்சகராக நான் தேடுவேனா? எந்ததொரு ஆன்மாவும் அதன் சொந்த செயல் களிலிருந்தே தவிர வேறு பலனடையாது, மேலும் ஒருவரின் சுமைகளை மற்றெவரும் சுமக்க மாட்டார்கள். இறுதியாக, நீங்கள் உங்க ளுடைய இரட்சகரிடத்திலே திரும்புவீர்கள், பின்னர் உங்களுடைய அனைத்து தர்க்கங்கள் குறித்தும் உங்களுக்கு அவர் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.