குர்ஆன் 6:19 — கால்நடை
“யாருடைய சாட்சியம் மிகப்பெரியது?” என்று கூறுவீராக. “கடவுள்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன்* உங்களுக்கும் மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும் உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார். உண்மையில், கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வங்கள்* இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி கூறமாட்டேன், ஒரே ஒரு தெய்வம் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை கைவிட்டுவிட்டேன்” என்று கூறுவீராக.
[6:18] அவர், அவருடைய படைப்புகளின் மீது மேலான அதிகாரம் கொண்டவர். அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
[6:20] எவர்களுக்கு, நாம் வேதத்தை கொடுத்திருக் கின்றோமோ அவர்கள் இதை தங்களுடைய சொந்த குழந்தைகளை அறிந்து கொள்வது போல் அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தான் தங்கள் ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவர்.