Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:18 — கால்நடை

அவர், அவருடைய படைப்புகளின் மீது மேலான அதிகாரம் கொண்டவர். அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.

[6:17] கடவுள் துன்பத்தைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அதை விடுவிக்க அவரைத்தவிர வேறு எவராலும் இயலாது. மேலும் அவர் ஒரு அருட்கொடையைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அவர் சர்வசக்தியுடையவர்.

[6:19] “யாருடைய சாட்சியம் மிகப்பெரியது?” என்று கூறுவீராக. “கடவுள்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன்* உங்களுக்கும் மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும் உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார். உண்மையில், கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வங்கள்* இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி கூறமாட்டேன், ஒரே ஒரு தெய்வம் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை கைவிட்டுவிட்டேன்” என்று கூறுவீராக.