குர்ஆன் 6:17 — கால்நடை
கடவுள் துன்பத்தைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அதை விடுவிக்க அவரைத்தவிர வேறு எவராலும் இயலாது. மேலும் அவர் ஒரு அருட்கொடையைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அவர் சர்வசக்தியுடையவர்.
[6:16] “அந்த நாளில் எவரொருவர் (தண்டனை யிலிருந்து) விடுவிக்கப்படுகின்றாரோ, அவர் அவருடைய கருணையை அடைந்துவிட்டார். மேலும் இதுதான் மகத்தான மாபெரும் வெற்றி”.
[6:18] அவர், அவருடைய படைப்புகளின் மீது மேலான அதிகாரம் கொண்டவர். அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.