குர்ஆன் 6:2 — கால்நடை
அவர்தான், உங்களை களிமண்ணில் இருந்து படைத்து பின்னர் உங்கள் ஆயுட்காலத்தை முன்னரே நிர்ணயித்தார், அந்த ஆயுட்காலம் அவருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சந்தேகப்படுகின்றீர்கள்.
[6:1] புகழ் அனைத்தும், வானங்கள் மற்றும் பூமியை படைத்தவரும், மேலும் இருளையும், ஒளியை யும் உண்டாக்கியவருமான கடவுள்-க்கே உரியது. இருப்பினும் தங்களுடைய இரட் சகரை நம்ப மறுப்பவர்கள் தொடர்ந்து விலகிச் செல்கின்றனர்.
[6:3] வானங்கள் மற்றும் பூமியில் அவர்தான் ஒரே கடவுள். உங்களுடைய இரகசியங்களையும், உங்கள் பிரகடனங்களையும் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.