Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:34 — கால்நடை

உமக்கு முன்னர் இருந்த தூதர்களும் மறுக்கப் பட்டனர், மேலும் அவர்கள் மறுப்பை எதிர் கொள்ளும்போது, உறுதியோடு விடாமுயற்சி யுடன் இருந்தார்கள். நம்முடைய வெற்றி அவர் களிடம் வரும் வரை அவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். ஒருபோதும் மாறாத கடவுள்- உடைய வழிமுறை இத்தகையதே. இவ்வாறு என்னுடைய தூதர்களின் சரித்திரம் உங்களுக்கு முன்னுதாரணங்களாக அமைந் துள்ளன.

[6:33] அவர்களுடைய கூற்றுக்களால் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மறுத்தது உம்மை அல்ல, அந்த தீயவர்கள் அவமதித்தது கடவுள்-உடைய வெளிப்பாடுகளை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[6:35] அவர்களுடைய மறுப்பு உங்களுக்குப் பெரிதாகத் தோன்றுமானால், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் பூமிக்கடியில் ஒரு சுரங்கத் தைத் தோண்டினாலும் அல்லது ஒரு ஏணி யைக் கொண்டு வானத்தில் ஏறினாலும், மேலும் அவர்களுக்காக ஓர் அற்புதத்தை உருவாக்கினாலும் (அவர்கள் அப்பொழுதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்). கடவுள் நாடி இருந்தால், அவர் அவர்களை ஒட்டு மொத்தமாக வழி நடத்தியிருக்க இயலும். ஆகையால், அறிவில்லாதவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்.