குர்ஆன் 6:33 — கால்நடை
அவர்களுடைய கூற்றுக்களால் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மறுத்தது உம்மை அல்ல, அந்த தீயவர்கள் அவமதித்தது கடவுள்-உடைய வெளிப்பாடுகளை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[6:32] இந்த உலகத்தின் வாழ்க்கை மாயை மற்றும் வீண்பகட்டு தவிர வேறில்லை. அதே சமயம் மறுவுலகின் வீடோ, நன்னெறியாளர் களுக்கு மிகமிகச் சிறந்தது. உங்களுக்கு புரிய வில்லையா?!
[6:34] உமக்கு முன்னர் இருந்த தூதர்களும் மறுக்கப் பட்டனர், மேலும் அவர்கள் மறுப்பை எதிர் கொள்ளும்போது, உறுதியோடு விடாமுயற்சி யுடன் இருந்தார்கள். நம்முடைய வெற்றி அவர் களிடம் வரும் வரை அவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். ஒருபோதும் மாறாத கடவுள்- உடைய வழிமுறை இத்தகையதே. இவ்வாறு என்னுடைய தூதர்களின் சரித்திரம் உங்களுக்கு முன்னுதாரணங்களாக அமைந் துள்ளன.