Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:32 — கால்நடை

இந்த உலகத்தின் வாழ்க்கை மாயை மற்றும் வீண்பகட்டு தவிர வேறில்லை. அதே சமயம் மறுவுலகின் வீடோ, நன்னெறியாளர் களுக்கு மிகமிகச் சிறந்தது. உங்களுக்கு புரிய வில்லையா?!

[6:31] அந்த நேரம் திடீரென அவர்களிடம் வரும்வரை கடவுள்-ஐச் சந்திப்பதை நம்ப மறுத்துவிட்டு, அதன்பிறகு “ நாங்கள் எங்கள் வாழ்க்கையை இந்த பூமியில் வீணாக்கியதற்கு ஆழ்ந்த வருத்தம் அடைகின்றோம்” என்று கூறுபவர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே. அவர்கள் தங்களுடைய முதுகுகளில் தங்களுடைய பாவங்களின் சுமைகளைச் சுமப்பார்கள், எத்தகையதொரு துன்பகரமான சுமை!

[6:33] அவர்களுடைய கூற்றுக்களால் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மறுத்தது உம்மை அல்ல, அந்த தீயவர்கள் அவமதித்தது கடவுள்-உடைய வெளிப்பாடுகளை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.