குர்ஆன் 6:31 — கால்நடை
அந்த நேரம் திடீரென அவர்களிடம் வரும்வரை கடவுள்-ஐச் சந்திப்பதை நம்ப மறுத்துவிட்டு, அதன்பிறகு “ நாங்கள் எங்கள் வாழ்க்கையை இந்த பூமியில் வீணாக்கியதற்கு ஆழ்ந்த வருத்தம் அடைகின்றோம்” என்று கூறுபவர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே. அவர்கள் தங்களுடைய முதுகுகளில் தங்களுடைய பாவங்களின் சுமைகளைச் சுமப்பார்கள், எத்தகையதொரு துன்பகரமான சுமை!
[6:30] அவர்கள், தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் நிற்பதை மட்டும் நீங்கள் பார்க்க முடியுமேயானால்! “ இது சத்தியம் அல்லவா?” என்று அவர் கேட்பார் “ எங்கள் இரட்சகர் மீது ஆணையாக, ஆம்” என்று அவர்கள் கூறுவார்கள், “உங்களுடைய நம்பிக்கையின்மையினால் நீங்கள் தண்டனைக்குள்ளாகி விட்டீர்கள்” என்று அவர் கூறுவார்.
[6:32] இந்த உலகத்தின் வாழ்க்கை மாயை மற்றும் வீண்பகட்டு தவிர வேறில்லை. அதே சமயம் மறுவுலகின் வீடோ, நன்னெறியாளர் களுக்கு மிகமிகச் சிறந்தது. உங்களுக்கு புரிய வில்லையா?!