குர்ஆன் 6:35 — கால்நடை
அவர்களுடைய மறுப்பு உங்களுக்குப் பெரிதாகத் தோன்றுமானால், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் பூமிக்கடியில் ஒரு சுரங்கத் தைத் தோண்டினாலும் அல்லது ஒரு ஏணி யைக் கொண்டு வானத்தில் ஏறினாலும், மேலும் அவர்களுக்காக ஓர் அற்புதத்தை உருவாக்கினாலும் (அவர்கள் அப்பொழுதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்). கடவுள் நாடி இருந்தால், அவர் அவர்களை ஒட்டு மொத்தமாக வழி நடத்தியிருக்க இயலும். ஆகையால், அறிவில்லாதவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்.
[6:34] உமக்கு முன்னர் இருந்த தூதர்களும் மறுக்கப் பட்டனர், மேலும் அவர்கள் மறுப்பை எதிர் கொள்ளும்போது, உறுதியோடு விடாமுயற்சி யுடன் இருந்தார்கள். நம்முடைய வெற்றி அவர் களிடம் வரும் வரை அவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். ஒருபோதும் மாறாத கடவுள்- உடைய வழிமுறை இத்தகையதே. இவ்வாறு என்னுடைய தூதர்களின் சரித்திரம் உங்களுக்கு முன்னுதாரணங்களாக அமைந் துள்ளன.
[6:36] எவர்கள் கவனமாக கேட்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பதில் அளிப்பார்கள். கடவுள் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு வார்; அவர்கள் இறுதியாக அவரிடமே திரும்பு வார்கள்.