குர்ஆன் 6:36 — கால்நடை
எவர்கள் கவனமாக கேட்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பதில் அளிப்பார்கள். கடவுள் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு வார்; அவர்கள் இறுதியாக அவரிடமே திரும்பு வார்கள்.
[6:35] அவர்களுடைய மறுப்பு உங்களுக்குப் பெரிதாகத் தோன்றுமானால், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் பூமிக்கடியில் ஒரு சுரங்கத் தைத் தோண்டினாலும் அல்லது ஒரு ஏணி யைக் கொண்டு வானத்தில் ஏறினாலும், மேலும் அவர்களுக்காக ஓர் அற்புதத்தை உருவாக்கினாலும் (அவர்கள் அப்பொழுதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்). கடவுள் நாடி இருந்தால், அவர் அவர்களை ஒட்டு மொத்தமாக வழி நடத்தியிருக்க இயலும். ஆகையால், அறிவில்லாதவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்.
[6:37] “ஒரு குறிப்பிட்ட அத்தாட்சி மட்டும் அவருக்கு அவருடைய இரட்சகரிடமிருந்து வந்தி ருந்தால்!” என்று அவர்கள் கூறினார்கள். “ஓர் அத்தாட்சியைக் கீழே அனுப்ப கடவுள் ஆற்றல் உடையவர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்று கூறுவீராக.