குர்ஆன் 6:47 — கால்நடை
“கடவுள்-ன் தண்டனை உங்களிடத்தில் திடீரெனவோ அல்லது ஒரு அறிவிப்பிற்கு பிறகோ வந்தால் என்ன செய்வீர்கள், அழிவிற்குள்ளாவோர் தீயவர்கள் தான் அல்லவா?” என்று கூறுவீராக.
[6:46] “கடவுள் உங்களுடைய செவிப்புலனையும், உங்களுடைய பார்வைப்புலனையும் எடுத்து விட்டால், மேலும் உங்களுடைய மனங்களில் முத்திரையிட்டுவிட்டால் என்ன செய்வீர்கள், கடவுள்-ஐத் தவிர, வேறு எந்த தெய்வம் இவற்றை உங்களுக்கு திரும்ப தர இயலும்?” என்று கூறுவீராக. வெளிப்பாடுகளை எவ்வாறு நாம் விளக்குகின்றோம் என்பதையும், மேலும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!
[6:48] நற்செய்திகளை அறிவிப்பவர்களாகவும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை, எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.