குர்ஆன் 6:51 — கால்நடை
மேலும் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் ஒன்று கூட்டப்படுவோம் என்பதில் பயபக்தியுடன் இருப்பவர்களுக்கு இதைக் (குர்ஆன்) கொண்டு உபதேசிப்பீராக - அவர்களுக்கு அவரைத்தவிர ஒரு இரட்சகரோ, எஜமானரோ அல்லது ஒரு பரிந்து பேசுபவரோ யாருமில்லை - அதனால் அவர்கள் மீட்சியை அடையலாம்.
[6:50] “கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் பெற்றிருக்கின்றேன் என்று உங்களிடம் நான் கூறமாட்டேன். அன்றி எதிர்காலம் பற்றியும் எனக்குத் தெரியாது. அன்றி நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. “குருடரும், பார்வை உள்ளவரும் சமமா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கூறுவீராக.
[6:52] மேலும் எவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் பகலிலும், இரவிலும் இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும், தங்களை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அவர்களை வெளி யேற்றாதீர்கள். அவர்களுடைய கேள்விக் கணக்கிற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல, உங்களுடைய கேள்விக்கணக்கிற்கு அவர்கள் பொறுப்பாளி அல்ல. நீங்கள் அவர்களை வெளியேற்றினால் நீங்கள் ஒரு வரம்பு மீறியவராகிவிடுவீர்கள்.