குர்ஆன் 6:50 — கால்நடை
“கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் பெற்றிருக்கின்றேன் என்று உங்களிடம் நான் கூறமாட்டேன். அன்றி எதிர்காலம் பற்றியும் எனக்குத் தெரியாது. அன்றி நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. “குருடரும், பார்வை உள்ளவரும் சமமா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கூறுவீராக.
[6:49] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர் களைப் பொறுத்தவரை அவர்களுடைய தீய குணங்களுக்காக அவர்கள் தண்டனை க்குள்ளாகின்றார்கள்.
[6:51] மேலும் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் ஒன்று கூட்டப்படுவோம் என்பதில் பயபக்தியுடன் இருப்பவர்களுக்கு இதைக் (குர்ஆன்) கொண்டு உபதேசிப்பீராக - அவர்களுக்கு அவரைத்தவிர ஒரு இரட்சகரோ, எஜமானரோ அல்லது ஒரு பரிந்து பேசுபவரோ யாருமில்லை - அதனால் அவர்கள் மீட்சியை அடையலாம்.