குர்ஆன் 6:49 — கால்நடை
நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர் களைப் பொறுத்தவரை அவர்களுடைய தீய குணங்களுக்காக அவர்கள் தண்டனை க்குள்ளாகின்றார்கள்.
[6:48] நற்செய்திகளை அறிவிப்பவர்களாகவும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை, எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.
[6:50] “கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் பெற்றிருக்கின்றேன் என்று உங்களிடம் நான் கூறமாட்டேன். அன்றி எதிர்காலம் பற்றியும் எனக்குத் தெரியாது. அன்றி நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. “குருடரும், பார்வை உள்ளவரும் சமமா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கூறுவீராக.