Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:52 — கால்நடை

மேலும் எவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் பகலிலும், இரவிலும் இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும், தங்களை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அவர்களை வெளி யேற்றாதீர்கள். அவர்களுடைய கேள்விக் கணக்கிற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல, உங்களுடைய கேள்விக்கணக்கிற்கு அவர்கள் பொறுப்பாளி அல்ல. நீங்கள் அவர்களை வெளியேற்றினால் நீங்கள் ஒரு வரம்பு மீறியவராகிவிடுவீர்கள்.

[6:51] மேலும் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் ஒன்று கூட்டப்படுவோம் என்பதில் பயபக்தியுடன் இருப்பவர்களுக்கு இதைக் (குர்ஆன்) கொண்டு உபதேசிப்பீராக - அவர்களுக்கு அவரைத்தவிர ஒரு இரட்சகரோ, எஜமானரோ அல்லது ஒரு பரிந்து பேசுபவரோ யாருமில்லை - அதனால் அவர்கள் மீட்சியை அடையலாம்.

[6:53] “நம்மிடையே கடவுள்-ஆல் அருள்பாலிக்கப் பட்ட மக்கள் இவர்கள்தானா?” என்று அவர் கள் (பரிகாசமாக) கூறும்படி செய்து மக்களில் ஒருவருக்கொருவரை நாம் இவ்வாறு சோதிப் போம். நன்றியுடையவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிந்தவர் அல்லவா?