குர்ஆன் 6:53 — கால்நடை
“நம்மிடையே கடவுள்-ஆல் அருள்பாலிக்கப் பட்ட மக்கள் இவர்கள்தானா?” என்று அவர் கள் (பரிகாசமாக) கூறும்படி செய்து மக்களில் ஒருவருக்கொருவரை நாம் இவ்வாறு சோதிப் போம். நன்றியுடையவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிந்தவர் அல்லவா?
[6:52] மேலும் எவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் பகலிலும், இரவிலும் இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும், தங்களை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அவர்களை வெளி யேற்றாதீர்கள். அவர்களுடைய கேள்விக் கணக்கிற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல, உங்களுடைய கேள்விக்கணக்கிற்கு அவர்கள் பொறுப்பாளி அல்ல. நீங்கள் அவர்களை வெளியேற்றினால் நீங்கள் ஒரு வரம்பு மீறியவராகிவிடுவீர்கள்.
[6:54] நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் உம்மிடம் வரும்போது நீங்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூறவேண்டும். உங்களுடைய இரட்சகர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். இவ்விதமாக, உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு வரம்புமீறல் செய்துவிட்டு, அதன்பிறகு வருந்தித்திருந்தி மேலும் சீர்த்திருத்திக் கொண்டால், பின்னர் அவர் மன்னிக்கின்றவர், மிக்க கருணையாளர்.