குர்ஆன் 6:54 — கால்நடை
நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் உம்மிடம் வரும்போது நீங்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூறவேண்டும். உங்களுடைய இரட்சகர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். இவ்விதமாக, உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு வரம்புமீறல் செய்துவிட்டு, அதன்பிறகு வருந்தித்திருந்தி மேலும் சீர்த்திருத்திக் கொண்டால், பின்னர் அவர் மன்னிக்கின்றவர், மிக்க கருணையாளர்.
[6:53] “நம்மிடையே கடவுள்-ஆல் அருள்பாலிக்கப் பட்ட மக்கள் இவர்கள்தானா?” என்று அவர் கள் (பரிகாசமாக) கூறும்படி செய்து மக்களில் ஒருவருக்கொருவரை நாம் இவ்வாறு சோதிப் போம். நன்றியுடையவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிந்தவர் அல்லவா?
[6:55] நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம். மேலும் தீயவர்களின் வழிகளை சுட்டிக்காட்டுகின்றோம்.