குர்ஆன் 6:56 — கால்நடை
“கடவுள்-ஐத் தவிர எதனை நீங்கள் வழிபடுகின்றீர்களோ, அதனை வழிபடுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக. “உங்களுடைய அபிப்பிராயங் களை நான் பின்பற்றமாட்டேன் அவ்வாறு செய்தால் நான் வழிகேட்டிற்கு சென்று விடுவேன், மேலும் வழிநடத்தப்படாமல் விட்டுவிடப்படுவேன்” என்று கூறுவீராக.
[6:55] நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம். மேலும் தீயவர்களின் வழிகளை சுட்டிக்காட்டுகின்றோம்.
[6:57] “நான், என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றினை பெற்றிருக்கின்றேன், நீங்களோ அதை ஏற்கமறுத்து விட்டீர்கள். நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையை, நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை, தீர்ப்பளித்தல் கடவுள்-க்கு மட்டுமே உரியது. அவர் உண்மையை விவரிக்கின்றார், மேலும் அவர் தான் சிறந்த நீதிபதி” என்று கூறுவீராக.