குர்ஆன் 6:58 — கால்நடை
“நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையின் மீது நான் அதிகாரம் பெற்றிருப்பேனேயானால் எல்லா விஷயமும் எப்போதோ முடிந்துவிட்டிருக்கும். தீயவர்கள் யார் என்பதை கடவுள் மிக நன்றாக அறிவார்” என்று கூறுவீராக.
[6:57] “நான், என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றினை பெற்றிருக்கின்றேன், நீங்களோ அதை ஏற்கமறுத்து விட்டீர்கள். நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையை, நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை, தீர்ப்பளித்தல் கடவுள்-க்கு மட்டுமே உரியது. அவர் உண்மையை விவரிக்கின்றார், மேலும் அவர் தான் சிறந்த நீதிபதி” என்று கூறுவீராக.
[6:59] எல்லா இரகசியங்களின் சாவிகளும் அவரிடமே உள்ளன; அவற்றை அவரைத்தவிர வேறெ வரும் அறியமாட்டார்கள். நிலத்தின் மீதும், மேலும் கடலுக்குள்ளும் உள்ள அனைத்தையும் அவர் அறிகின்றார். அவர் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. மேலும் மண்ணின் ஆழத்தில் ஒரு தானியமும் இல்லை. மேலும் ஈரமானதோ அல்லது உலர்ந்ததோ அனைத்தும் ஓர் ஆழ்ந்த பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.