Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:59 — கால்நடை

எல்லா இரகசியங்களின் சாவிகளும் அவரிடமே உள்ளன; அவற்றை அவரைத்தவிர வேறெ வரும் அறியமாட்டார்கள். நிலத்தின் மீதும், மேலும் கடலுக்குள்ளும் உள்ள அனைத்தையும் அவர் அறிகின்றார். அவர் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. மேலும் மண்ணின் ஆழத்தில் ஒரு தானியமும் இல்லை. மேலும் ஈரமானதோ அல்லது உலர்ந்ததோ அனைத்தும் ஓர் ஆழ்ந்த பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.

[6:58] “நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையின் மீது நான் அதிகாரம் பெற்றிருப்பேனேயானால் எல்லா விஷயமும் எப்போதோ முடிந்துவிட்டிருக்கும். தீயவர்கள் யார் என்பதை கடவுள் மிக நன்றாக அறிவார்” என்று கூறுவீராக.

[6:60] அவர்தான் இரவு நேரங்களில் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார். மேலும் பகல் நேரங்களில் உங்களுடைய மிகச் சிறிய செயல்களையும் கூட அறிகின்றார். உங்களு டைய ஆயுட்காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு காலையிலும் அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார், அதன் பிறகு நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்புவீர்கள். பின்னர் நீங்கள் செய்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.