குர்ஆன் 6:60 — கால்நடை
அவர்தான் இரவு நேரங்களில் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார். மேலும் பகல் நேரங்களில் உங்களுடைய மிகச் சிறிய செயல்களையும் கூட அறிகின்றார். உங்களு டைய ஆயுட்காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு காலையிலும் அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார், அதன் பிறகு நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்புவீர்கள். பின்னர் நீங்கள் செய்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.
[6:59] எல்லா இரகசியங்களின் சாவிகளும் அவரிடமே உள்ளன; அவற்றை அவரைத்தவிர வேறெ வரும் அறியமாட்டார்கள். நிலத்தின் மீதும், மேலும் கடலுக்குள்ளும் உள்ள அனைத்தையும் அவர் அறிகின்றார். அவர் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. மேலும் மண்ணின் ஆழத்தில் ஒரு தானியமும் இல்லை. மேலும் ஈரமானதோ அல்லது உலர்ந்ததோ அனைத்தும் ஓர் ஆழ்ந்த பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.
[6:61] அவருடைய படைப்புகள் மீது அவர் மேலான அதிகாரம் உடையவர், மேலும் அவர் உங்களைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிக்கின்றார். உங்களில் எவருக்கெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அந்த மரண வேளை வருகின்றதோ அப்போது, நம்முடைய தூதர்கள் தாமதிக்காது அவரை மரணிக்கச் செய்கின்றார்கள்.