குர்ஆன் 6:61 — கால்நடை
அவருடைய படைப்புகள் மீது அவர் மேலான அதிகாரம் உடையவர், மேலும் அவர் உங்களைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிக்கின்றார். உங்களில் எவருக்கெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அந்த மரண வேளை வருகின்றதோ அப்போது, நம்முடைய தூதர்கள் தாமதிக்காது அவரை மரணிக்கச் செய்கின்றார்கள்.
[6:60] அவர்தான் இரவு நேரங்களில் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார். மேலும் பகல் நேரங்களில் உங்களுடைய மிகச் சிறிய செயல்களையும் கூட அறிகின்றார். உங்களு டைய ஆயுட்காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு காலையிலும் அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார், அதன் பிறகு நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்புவீர்கள். பின்னர் நீங்கள் செய்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.
[6:62] அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், மேலும் எஜமானரு மாகிய கடவுள்-இடம் திரும்பி விடுவார்கள். நிச்சயமாக, அவர்தான் இறுதியான நீதிபதி, அவர் மிகமிகச் சரியாகக் கணக்கிடுபவர்.