Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:7 — கால்நடை

நாம் அவர்களுக்குக் கண்களால் காணக் கூடிய, காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இறக்கி அனுப்பியிருந்தாலும், மேலும் அதை அவர்கள் தங்களுடைய கரங்களால் தொட்டு உணர்ந்தாலும், நம்பமறுத்தவர்கள் “இது திறமையான மாயாஜாலமே தவிர வேறில்லை” என்று கூறியிருப்பார்கள்.

[6:6] அவர்களுக்கு முன்பு, எத்தனை தலை முறையினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? உங்களுக்கு செய்ததை விட அதிகமாக அவர்களுக்குச் செய்து, பூமியில் நாம் அவர்களை நிலைப்படுத்தினோம், மேலும் நாம் அருட்கொடைகளை அவர்கள் மீது தாராளமாகப் பொழிந்தோம். மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளை அவர்களுக்குக் கொடுத்தோம். அதன்பின்னர் அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களை அழித்தோம், மேலும் அவர் களுடைய இடத்தில் வேறு தலைமுறையினரை அவர்களுக்குப் பதிலாக நாம் அமர்த்தினோம்.

[6:8] அவர்கள் “ அவருடன் ஒரு வானவர் மட்டும் கீழே வர முடிந்திருந்தால்!” என்றும் கூறினார்கள். நாம் ஒரு வானவரை அனுப்பியிருந்தால், சகல விஷயமும் முடிந்து போயிருக்கும், மேலும் அவர்களுக்கு சிறிதளவும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்காது.