குர்ஆன் 6:8 — கால்நடை
அவர்கள் “ அவருடன் ஒரு வானவர் மட்டும் கீழே வர முடிந்திருந்தால்!” என்றும் கூறினார்கள். நாம் ஒரு வானவரை அனுப்பியிருந்தால், சகல விஷயமும் முடிந்து போயிருக்கும், மேலும் அவர்களுக்கு சிறிதளவும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்காது.
[6:7] நாம் அவர்களுக்குக் கண்களால் காணக் கூடிய, காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இறக்கி அனுப்பியிருந்தாலும், மேலும் அதை அவர்கள் தங்களுடைய கரங்களால் தொட்டு உணர்ந்தாலும், நம்பமறுத்தவர்கள் “இது திறமையான மாயாஜாலமே தவிர வேறில்லை” என்று கூறியிருப்பார்கள்.
[6:9] நாம் ஒரு வானவரை அனுப்பி இருந்தாலும், அவரையும் ஒரு மனித உருவத்திலேயே அனுப்பி இருப்போம். மேலும் நாம் அவர்களை, இப்பொழுது எப்படி குழம்பிய நிலையில் இருக்கின்றார்களோ, அதே போன்ற குழம்பிய நிலையிலேயே அப்பொழுதும் அவர்களை வைத்திருந்திருப்போம்.