Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:9 — கால்நடை

நாம் ஒரு வானவரை அனுப்பி இருந்தாலும், அவரையும் ஒரு மனித உருவத்திலேயே அனுப்பி இருப்போம். மேலும் நாம் அவர்களை, இப்பொழுது எப்படி குழம்பிய நிலையில் இருக்கின்றார்களோ, அதே போன்ற குழம்பிய நிலையிலேயே அப்பொழுதும் அவர்களை வைத்திருந்திருப்போம்.

[6:8] அவர்கள் “ அவருடன் ஒரு வானவர் மட்டும் கீழே வர முடிந்திருந்தால்!” என்றும் கூறினார்கள். நாம் ஒரு வானவரை அனுப்பியிருந்தால், சகல விஷயமும் முடிந்து போயிருக்கும், மேலும் அவர்களுக்கு சிறிதளவும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்காது.

[6:10] உங்களுக்கு முன்னர் வந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டார்கள். எவர்கள் அவர்களைப் பரிகாசம் செய்தார்களோ, அவர்கள் கேலி செய்து கொண்டிருந்ததின் விளைவுகளை அனுபவித் தார்கள்.