Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:70 — கால்நடை

وَذَرِ الَّذينَ اتَّخَذوا دينَهُم لَعِبًا وَلَهوًا وَغَرَّتهُمُ الحَيوٰةُ الدُّنيا ۚ وَذَكِّر بِهِ أَن تُبسَلَ نَفسٌ بِما كَسَبَت لَيسَ لَها مِن دونِ اللَّهِ وَلِىٌّ وَلا شَفيعٌ وَإِن تَعدِل كُلَّ عَدلٍ لا يُؤخَذ مِنها ۗ أُولٰئِكَ الَّذينَ أُبسِلوا بِما كَسَبوا ۖ لَهُم شَرابٌ مِن حَميمٍ وَعَذابٌ أَليمٌ بِما كانوا يَكفُرونَ

இவ்வுலக வாழ்க்கையில் தங்களை முற்றிலும் இணைத்துக் கொண்டு, தங்களுடைய மார்க்கத் தை வீணாகவும், அதை ஒரு சமூக விழா போலவும் எடுத்துக் கொண்டவர்களை நீங்கள் புறக் கணித்து விடுங்கள். ஓர் ஆன்மா அதனுடைய பாவமான சம்பாத்தியங்களின் விளைவுகளை அனுபவிக்கா மலிருக்கும் பொருட்டு, இதைக் (குர் ஆன்) கொண்டு நினைவூட்டவும். அதற்கு கடவுள்-ஐத் தவிர ஓர் இரட்சகரோ மேலும் எஜமானரோ ஒரு பரிந்து பேசுபவரோ கிடையாது. அது எந்த விதமான பிணைத் தொகையை கொடுக்க முடிந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவை சம்பாதித்த தீய செயல்களின் விளைவுகளை அவை அனுபவிக்கும்: அவை நரக பானங்களுக்கும் மேலும் அவைகளின் நம்பிக்கையின்மையின் காரணமாக வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டன.

[6:69] அந்த மக்களின் பேச்சுக்களுக்கு நன்னெறி யாளர்கள் பொறுப்பல்ல, ஆனால் அவர்களுக்கு நினைவூட்ட இது உதவலாம்; ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்படலாம்.

[6:71] “கடவுள் எங்களை வழி நடத்தியதன் பிறகு, எங்களுடைய குதிகால்களைக் கொண்டு திரும்பியவர்களாக, கடவுள்-ஐத் தவிர எங்களுக்கு நன்மையோ அல்லது எங்களுக்கு தீங்கோ செய்வதற்கு ஆற்றல் பெற்றிராதவையிடம் நாங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்போமா? அவ்வாறெனில், எங்களோடு சரியான பாதையில் இருங்கள் என்று அவர்களுடைய நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், சாத்தானால் வசப்படுத்தப்பட்டு மேலும் முற்றிலும் குழம்பிய வர்களாக விடப்பட்டவர்களோடு நாங்கள் சேர்ந்துவிடுவோம்” என்று கூறுவீராக. “கடவுள்-உடைய வழிகாட்டுதலே சரியான வழிகாட்டு தலாகும். நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளோம்” என்று கூறுவீராக.