Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:69 — கால்நடை

அந்த மக்களின் பேச்சுக்களுக்கு நன்னெறி யாளர்கள் பொறுப்பல்ல, ஆனால் அவர்களுக்கு நினைவூட்ட இது உதவலாம்; ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்படலாம்.

[6:68] நம்முடைய வெளிப்பாடுகளைப் பரிகாசம் செய் பவர்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் வேறொரு விஷயத்தில் மூழ்கும் வரை அவர்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களை மறக்கும்படிச் செய்து விட்டால், அதன்பிறகு உங்களுக்கு நினைவு வந்தவுடன் இத்தகைய தீய மக்களுடன் அமர்ந்திருக்காதீர்கள்.

[6:70] இவ்வுலக வாழ்க்கையில் தங்களை முற்றிலும் இணைத்துக் கொண்டு, தங்களுடைய மார்க்கத் தை வீணாகவும், அதை ஒரு சமூக விழா போலவும் எடுத்துக் கொண்டவர்களை நீங்கள் புறக் கணித்து விடுங்கள். ஓர் ஆன்மா அதனுடைய பாவமான சம்பாத்தியங்களின் விளைவுகளை அனுபவிக்கா மலிருக்கும் பொருட்டு, இதைக் (குர் ஆன்) கொண்டு நினைவூட்டவும். அதற்கு கடவுள்-ஐத் தவிர ஓர் இரட்சகரோ மேலும் எஜமானரோ ஒரு பரிந்து பேசுபவரோ கிடையாது. அது எந்த விதமான பிணைத் தொகையை கொடுக்க முடிந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவை சம்பாதித்த தீய செயல்களின் விளைவுகளை அவை அனுபவிக்கும்: அவை நரக பானங்களுக்கும் மேலும் அவைகளின் நம்பிக்கையின்மையின் காரணமாக வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டன.