Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:72 — கால்நடை

“இன்னும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடியுங்கள், மேலும் அவரிடம் பயபக்தியோடிருங்கள் - அவருக்கு முன்னால் தான் (கணக்கு வழக்கிற்காக) நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.”

[6:71] “கடவுள் எங்களை வழி நடத்தியதன் பிறகு, எங்களுடைய குதிகால்களைக் கொண்டு திரும்பியவர்களாக, கடவுள்-ஐத் தவிர எங்களுக்கு நன்மையோ அல்லது எங்களுக்கு தீங்கோ செய்வதற்கு ஆற்றல் பெற்றிராதவையிடம் நாங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்போமா? அவ்வாறெனில், எங்களோடு சரியான பாதையில் இருங்கள் என்று அவர்களுடைய நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், சாத்தானால் வசப்படுத்தப்பட்டு மேலும் முற்றிலும் குழம்பிய வர்களாக விடப்பட்டவர்களோடு நாங்கள் சேர்ந்துவிடுவோம்” என்று கூறுவீராக. “கடவுள்-உடைய வழிகாட்டுதலே சரியான வழிகாட்டு தலாகும். நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளோம்” என்று கூறுவீராக.

[6:73] அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் படைத்தவர். அவர், “ஆகுக,” என்று கூறும் போதெல்லாம் அது ஆகிவிடும். அவருடைய வார்த்தைகள் பரிபூரணமான சத்தியம் ஆகும். கொம்பு ஊதப்படும் அந்த நாளில், அனைத்து ஆட்சி அதிகாரங்களும் அவருக்கு உரியது. இரகசியங்களையும் மேலும் பிரகடனங்களையும் அறிந்தவர், அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.