குர்ஆன் 6:73 — கால்நடை
அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் படைத்தவர். அவர், “ஆகுக,” என்று கூறும் போதெல்லாம் அது ஆகிவிடும். அவருடைய வார்த்தைகள் பரிபூரணமான சத்தியம் ஆகும். கொம்பு ஊதப்படும் அந்த நாளில், அனைத்து ஆட்சி அதிகாரங்களும் அவருக்கு உரியது. இரகசியங்களையும் மேலும் பிரகடனங்களையும் அறிந்தவர், அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
[6:72] “இன்னும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடியுங்கள், மேலும் அவரிடம் பயபக்தியோடிருங்கள் - அவருக்கு முன்னால் தான் (கணக்கு வழக்கிற்காக) நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.”
[6:74] ஆப்ரஹாம் அவருடைய தந்தை ஆஜரிடம் “எப்படி நீங்கள் சிலைகளை தெய்வங்களாக வழிபட இயலும்? உங்களையும், உங்களுடைய மக்களையும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்களாகவே நான் காண்கின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.