குர்ஆன் 6:74 — கால்நடை
ஆப்ரஹாம் அவருடைய தந்தை ஆஜரிடம் “எப்படி நீங்கள் சிலைகளை தெய்வங்களாக வழிபட இயலும்? உங்களையும், உங்களுடைய மக்களையும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்களாகவே நான் காண்கின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[6:73] அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் படைத்தவர். அவர், “ஆகுக,” என்று கூறும் போதெல்லாம் அது ஆகிவிடும். அவருடைய வார்த்தைகள் பரிபூரணமான சத்தியம் ஆகும். கொம்பு ஊதப்படும் அந்த நாளில், அனைத்து ஆட்சி அதிகாரங்களும் அவருக்கு உரியது. இரகசியங்களையும் மேலும் பிரகடனங்களையும் அறிந்தவர், அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
[6:75] நாம் ஆப்ரஹாமிற்கு வானங்கள் மற்றும் பூமியின் அதிசயங்களைக் காட்டினோம், மேலும் அவருக்கு உறுதிப்பாட்டைக் கொண்டு அருள் புரிந்தோம்: