குர்ஆன் 6:75 — கால்நடை
நாம் ஆப்ரஹாமிற்கு வானங்கள் மற்றும் பூமியின் அதிசயங்களைக் காட்டினோம், மேலும் அவருக்கு உறுதிப்பாட்டைக் கொண்டு அருள் புரிந்தோம்:
[6:74] ஆப்ரஹாம் அவருடைய தந்தை ஆஜரிடம் “எப்படி நீங்கள் சிலைகளை தெய்வங்களாக வழிபட இயலும்? உங்களையும், உங்களுடைய மக்களையும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்களாகவே நான் காண்கின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[6:76] இரவு வீழ்ந்த போது, அவர் ஒரு பிரகாசிக்கும் கிரகத்தைக் கண்டார். “ இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்” என்று கூறினார். அது மறைந்த போது, “மறைந்து போகும் (தெய்வங்களை) நான் நேசிக்க மாட்டேன்” என்று கூறினார்.