குர்ஆன் 6:76 — கால்நடை
இரவு வீழ்ந்த போது, அவர் ஒரு பிரகாசிக்கும் கிரகத்தைக் கண்டார். “ இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்” என்று கூறினார். அது மறைந்த போது, “மறைந்து போகும் (தெய்வங்களை) நான் நேசிக்க மாட்டேன்” என்று கூறினார்.
[6:75] நாம் ஆப்ரஹாமிற்கு வானங்கள் மற்றும் பூமியின் அதிசயங்களைக் காட்டினோம், மேலும் அவருக்கு உறுதிப்பாட்டைக் கொண்டு அருள் புரிந்தோம்:
[6:77] சந்திரன் உதயமாவதை அவர் கண்ட போது, “இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்!” என்று கூறினார். அது மறைந்த போது, “என்னு டைய இரட்சகர் என்னை வழி நடத்தாதவரை நான் வழி தவறியவர்களோடு தான் இருப்பேன்” என்று கூறினார்.