குர்ஆன் 6:77 — கால்நடை
சந்திரன் உதயமாவதை அவர் கண்ட போது, “இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்!” என்று கூறினார். அது மறைந்த போது, “என்னு டைய இரட்சகர் என்னை வழி நடத்தாதவரை நான் வழி தவறியவர்களோடு தான் இருப்பேன்” என்று கூறினார்.
[6:76] இரவு வீழ்ந்த போது, அவர் ஒரு பிரகாசிக்கும் கிரகத்தைக் கண்டார். “ இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்” என்று கூறினார். அது மறைந்த போது, “மறைந்து போகும் (தெய்வங்களை) நான் நேசிக்க மாட்டேன்” என்று கூறினார்.
[6:78] சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது, “இது தான் என்னுடைய இரட்சகராக இருக்க வேண்டும். இது மிகப்பெரியது” என்று கூறினார். ஆனால் அது அஸ்தமித்த போது அவர் கூறினார், “என்னுடைய மக்களே, உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை நான் பகிரங்கமாக கண்டனம் செய்கின்றேன்.