Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:90 — கால்நடை

இவர்கள் தான் கடவுள்-ஆல் வழி நடத்தப்பட்டவர்கள். நீங்கள் அவர்களுடைய அடிச்சுவட்டில் வழி நடத்தப்பட வேண்டும். “நான் இதற்காக உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க மாட்டேன். இது எல்லா மக்களுக்கு மான ஒரு செய்தியே அன்றி வேறில்லை” என்று கூறுவீராக.

[6:89] நாம் வேதத்தையும், ஞானத்தையும் மேலும் வேதத்தின் தூதுத்துவத்தையும் கொடுத்தது அவர்களுக்குத்தான். இந்த மக்கள் நம்ப மறுத்தால், நாம் அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை அவர்களுக்குப் பதிலாக அமர்த்துவோம், மேலும் அந்த புதிய மக்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

[6:91] கடவுள்-ஐ அவர்கள் எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு, ஒருபோதும் மதிக்க வில்லை. அதனால் அவர்கள், “ கடவுள் எந்த மனிதருக்கும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்.” என்று கூறினார்கள். “ அவ்வாறா யின் மக்களுக்கு ஒளியும் வழிகாட்டுதலும் உடைய மோஸஸ் கொண்டு வந்த வேதத்தை வெளிப்படுத்தியது யார்?” என்று கூறுவீராக. நீங்கள் அதைப் பிரகடனப்படுத்துவதற்காகக் காகிதத்தில் எழுதிக் கொள்கின்றீர்கள், அதேசமயம் அவற்றில் பெரும் பகுதியை மறைக்கின்றீர்கள். நீங்கள் ஒருபோதும் அறிந்திராதது உங்களுக்கு கற்பிக்கப்பட்டது - உங்களுக்கும் உங்களுடையபெற்றோருக்கும். “கடவுள் (தான் இதை வெளிப்படுத்தினார்)” என்று கூறுவீராக, பின்னர் அவர்களை அவர் களுடைய கவனமின்மையில், விளையாடியவர் களாக இருக்க விட்டுவிடுவீராக.