Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:91 — கால்நடை

கடவுள்-ஐ அவர்கள் எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு, ஒருபோதும் மதிக்க வில்லை. அதனால் அவர்கள், “ கடவுள் எந்த மனிதருக்கும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்.” என்று கூறினார்கள். “ அவ்வாறா யின் மக்களுக்கு ஒளியும் வழிகாட்டுதலும் உடைய மோஸஸ் கொண்டு வந்த வேதத்தை வெளிப்படுத்தியது யார்?” என்று கூறுவீராக. நீங்கள் அதைப் பிரகடனப்படுத்துவதற்காகக் காகிதத்தில் எழுதிக் கொள்கின்றீர்கள், அதேசமயம் அவற்றில் பெரும் பகுதியை மறைக்கின்றீர்கள். நீங்கள் ஒருபோதும் அறிந்திராதது உங்களுக்கு கற்பிக்கப்பட்டது - உங்களுக்கும் உங்களுடையபெற்றோருக்கும். “கடவுள் (தான் இதை வெளிப்படுத்தினார்)” என்று கூறுவீராக, பின்னர் அவர்களை அவர் களுடைய கவனமின்மையில், விளையாடியவர் களாக இருக்க விட்டுவிடுவீராக.

[6:90] இவர்கள் தான் கடவுள்-ஆல் வழி நடத்தப்பட்டவர்கள். நீங்கள் அவர்களுடைய அடிச்சுவட்டில் வழி நடத்தப்பட வேண்டும். “நான் இதற்காக உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க மாட்டேன். இது எல்லா மக்களுக்கு மான ஒரு செய்தியே அன்றி வேறில்லை” என்று கூறுவீராக.

[6:92] மிக முக்கியமான சமூகத்தையும்* மேலும் அதைச் சுற்றியுள்ள அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற இதுவும், நாம் வெளிப்படுத்தியுள்ள ஒரு புனிதமான வேதமே ஆகும். எவர்கள் மறுவுலகை நம்புகின்றார்களோ அவர்கள் இதை (வேதத்தை) நம்புவார்கள், மேலும் தொடர்பு தொழுகை களையும் (ஸலாத்) கடைபிடிப்பார்கள்.