Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:92 — கால்நடை

மிக முக்கியமான சமூகத்தையும்* மேலும் அதைச் சுற்றியுள்ள அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற இதுவும், நாம் வெளிப்படுத்தியுள்ள ஒரு புனிதமான வேதமே ஆகும். எவர்கள் மறுவுலகை நம்புகின்றார்களோ அவர்கள் இதை (வேதத்தை) நம்புவார்கள், மேலும் தொடர்பு தொழுகை களையும் (ஸலாத்) கடைபிடிப்பார்கள்.

[6:91] கடவுள்-ஐ அவர்கள் எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு, ஒருபோதும் மதிக்க வில்லை. அதனால் அவர்கள், “ கடவுள் எந்த மனிதருக்கும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்.” என்று கூறினார்கள். “ அவ்வாறா யின் மக்களுக்கு ஒளியும் வழிகாட்டுதலும் உடைய மோஸஸ் கொண்டு வந்த வேதத்தை வெளிப்படுத்தியது யார்?” என்று கூறுவீராக. நீங்கள் அதைப் பிரகடனப்படுத்துவதற்காகக் காகிதத்தில் எழுதிக் கொள்கின்றீர்கள், அதேசமயம் அவற்றில் பெரும் பகுதியை மறைக்கின்றீர்கள். நீங்கள் ஒருபோதும் அறிந்திராதது உங்களுக்கு கற்பிக்கப்பட்டது - உங்களுக்கும் உங்களுடையபெற்றோருக்கும். “கடவுள் (தான் இதை வெளிப்படுத்தினார்)” என்று கூறுவீராக, பின்னர் அவர்களை அவர் களுடைய கவனமின்மையில், விளையாடியவர் களாக இருக்க விட்டுவிடுவீராக.

[6:93] பொய்களை கற்பனை செய்து, மேலும் அவை களை கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றவன், அல்லது எத்தகைய தெய்வீக உள்ளுணர்வும் அவனுக்கு கொடுக்கப்படாமல் இருக்கும்போது “நான் தெய்வீக உள்ளுணர்வைப் பெற்றிருக் கின்றேன்”, என்று கூறுபவன், அல்லது “கடவுள்-உடைய வெளிப்பாடுகளைப் போலவே என்னாலும் எழுத இயலும்” என்று கூறுபவனை விட மிகப்பெரிய பாவி யார்? அந்த வரம்பு மீறியவர்களை மரணத்தருவாயில் நீங்கள் காணமுடியுமேயானால்! வானவர்கள் அவர்களுடைய கரங்களை இவர்களை நோக்கி, “உங்கள் ஆன்மாக்களை, வெளி யேற்றுங்கள் எனக் கூறிவயவர்களாக நீட்டு வார்கள். இன்றைய தினம், கடவுள்-ஐப் பற்றி உண்மையல்லாததை கூறியதற்காகவும், மேலும் அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் மிகவும் ஆணவம் கொண்டு இருந்ததற்காகவும் ஓர் இழிவான தண்டனைக் குள்ளாகிவிட்டீர்கள்.