குர்ஆன் 6:93 — கால்நடை
பொய்களை கற்பனை செய்து, மேலும் அவை களை கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றவன், அல்லது எத்தகைய தெய்வீக உள்ளுணர்வும் அவனுக்கு கொடுக்கப்படாமல் இருக்கும்போது “நான் தெய்வீக உள்ளுணர்வைப் பெற்றிருக் கின்றேன்”, என்று கூறுபவன், அல்லது “கடவுள்-உடைய வெளிப்பாடுகளைப் போலவே என்னாலும் எழுத இயலும்” என்று கூறுபவனை விட மிகப்பெரிய பாவி யார்? அந்த வரம்பு மீறியவர்களை மரணத்தருவாயில் நீங்கள் காணமுடியுமேயானால்! வானவர்கள் அவர்களுடைய கரங்களை இவர்களை நோக்கி, “உங்கள் ஆன்மாக்களை, வெளி யேற்றுங்கள் எனக் கூறிவயவர்களாக நீட்டு வார்கள். இன்றைய தினம், கடவுள்-ஐப் பற்றி உண்மையல்லாததை கூறியதற்காகவும், மேலும் அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் மிகவும் ஆணவம் கொண்டு இருந்ததற்காகவும் ஓர் இழிவான தண்டனைக் குள்ளாகிவிட்டீர்கள்.
[6:92] மிக முக்கியமான சமூகத்தையும்* மேலும் அதைச் சுற்றியுள்ள அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற இதுவும், நாம் வெளிப்படுத்தியுள்ள ஒரு புனிதமான வேதமே ஆகும். எவர்கள் மறுவுலகை நம்புகின்றார்களோ அவர்கள் இதை (வேதத்தை) நம்புவார்கள், மேலும் தொடர்பு தொழுகை களையும் (ஸலாத்) கடைபிடிப்பார்கள்.
[6:94] “நாம் உங்களுக்கு வழங்கியவற்றைப் பின்னால் விட்டு விட்டு, முதன் முறையாக நாம் உங்களை எவ்வாறு படைத்தோமோ, அவ்வாறே தனித்தவர்களாக நம்மிடம் நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள். பரிந்துரை செய்வார்கள் என்றும் மேலும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், என்றும் உரிமை கொண்டாடி நீங்கள் வழிபட்ட இணைத்தெய்வங்களை நாம் உங்களோடு பார்க்கவில்லை. உங்களுக் கிடையில் இருந்த அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் ஏற்படுத்திய அந்த இணைத்தெய்வங்கள் உங்களைக் கைவிட்டு விட்டன.”