குர்ஆன் 6:95 — கால்நடை
கடவுள் தான், தானியங்கள் மற்றும் விதை களை வெடித்து முளைக்கச் செய்கின்றார். அவர் இறந்தவைகளில் இருந்து உயிர் உள்ள வைகளையும், மேலும் உயிர் உள்ளவைகளில் இருந்து இறந்தவைகளையும் உண்டாக்கு கின்றார். இவ்விதமானவரே கடவுள்; எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்!
[6:94] “நாம் உங்களுக்கு வழங்கியவற்றைப் பின்னால் விட்டு விட்டு, முதன் முறையாக நாம் உங்களை எவ்வாறு படைத்தோமோ, அவ்வாறே தனித்தவர்களாக நம்மிடம் நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள். பரிந்துரை செய்வார்கள் என்றும் மேலும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், என்றும் உரிமை கொண்டாடி நீங்கள் வழிபட்ட இணைத்தெய்வங்களை நாம் உங்களோடு பார்க்கவில்லை. உங்களுக் கிடையில் இருந்த அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் ஏற்படுத்திய அந்த இணைத்தெய்வங்கள் உங்களைக் கைவிட்டு விட்டன.”
[6:96] வைகறைப் பொழுது வெடிக்கும் பொழுது, அவர் காலைப்பொழுதை வெளியாக்குகின்றார். அவர் இரவை அமைதியானதாக ஆக்கினார், மேலும் அவர் சூரியனையும், சந்திரனையும் கணக்கிடப்பயன்படும் சாதனங்களாக்கினார். சர்வ வல்லமையுடைய, எல்லாம் அறிந்தவரின் திட்டம் இத்தகையதே.