குர்ஆன் 6:96 — கால்நடை
வைகறைப் பொழுது வெடிக்கும் பொழுது, அவர் காலைப்பொழுதை வெளியாக்குகின்றார். அவர் இரவை அமைதியானதாக ஆக்கினார், மேலும் அவர் சூரியனையும், சந்திரனையும் கணக்கிடப்பயன்படும் சாதனங்களாக்கினார். சர்வ வல்லமையுடைய, எல்லாம் அறிந்தவரின் திட்டம் இத்தகையதே.
[6:95] கடவுள் தான், தானியங்கள் மற்றும் விதை களை வெடித்து முளைக்கச் செய்கின்றார். அவர் இறந்தவைகளில் இருந்து உயிர் உள்ள வைகளையும், மேலும் உயிர் உள்ளவைகளில் இருந்து இறந்தவைகளையும் உண்டாக்கு கின்றார். இவ்விதமானவரே கடவுள்; எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்!
[6:97] மேலும் தரையின் மீதும் கடலின் மீதும், இருள்களின் போது உங்களுக்கு வழிகாட்ட நட்சத்திரங்களை அவர்தான் ஏற்படுத்தினார். அறியக்கூடிய மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றோம்.