குர்ஆன் 6:97 — கால்நடை
மேலும் தரையின் மீதும் கடலின் மீதும், இருள்களின் போது உங்களுக்கு வழிகாட்ட நட்சத்திரங்களை அவர்தான் ஏற்படுத்தினார். அறியக்கூடிய மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றோம்.
[6:96] வைகறைப் பொழுது வெடிக்கும் பொழுது, அவர் காலைப்பொழுதை வெளியாக்குகின்றார். அவர் இரவை அமைதியானதாக ஆக்கினார், மேலும் அவர் சூரியனையும், சந்திரனையும் கணக்கிடப்பயன்படும் சாதனங்களாக்கினார். சர்வ வல்லமையுடைய, எல்லாம் அறிந்தவரின் திட்டம் இத்தகையதே.
[6:98] அவர் உங்களை ஒரு மனிதரில் இருந்து துவக்கினார். மேலும் உங்களுடைய பாதை யையும், அப்படியே உங்களுடைய இறுதி விதியையும் தீர்மானித்தார். புரிந்து கொள்ளும் மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடு களைத் தெளிவாக்குகின்றோம்.