Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:98 — கால்நடை

அவர் உங்களை ஒரு மனிதரில் இருந்து துவக்கினார். மேலும் உங்களுடைய பாதை யையும், அப்படியே உங்களுடைய இறுதி விதியையும் தீர்மானித்தார். புரிந்து கொள்ளும் மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடு களைத் தெளிவாக்குகின்றோம்.

[6:97] மேலும் தரையின் மீதும் கடலின் மீதும், இருள்களின் போது உங்களுக்கு வழிகாட்ட நட்சத்திரங்களை அவர்தான் ஏற்படுத்தினார். அறியக்கூடிய மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றோம்.

[6:99] அவர்தான் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குகின்றார், அதன் மூலம் நாம் எல்லா வகையான தாவரங்களையும் உற்பத்தி செய்கின்றோம். பசுமையான பொருட்களி லிருந்து அதிக எண்ணிக்கையில் பல்வகைத் தானியங்களை, தொங்கும் குலைகளைக் கொண்ட கிளையில்லாத மரங்களை, மேலும் திராட்சை, ஒலிவம், மற்றும் மாதுளைத் தோட்டங்களை; ஒரே மாதிரியானதாயினும், மாறுபட்ட பழங்களை நாம் உற்பத்தி செய்கின் றோம். அவற்றின் பழங்களை, அவைகள் வளர்ந்து பழமாகும் போது கவனியுங்கள். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை அத்தாட்சிகளாகும்.