குர்ஆன் 6:99 — கால்நடை
அவர்தான் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குகின்றார், அதன் மூலம் நாம் எல்லா வகையான தாவரங்களையும் உற்பத்தி செய்கின்றோம். பசுமையான பொருட்களி லிருந்து அதிக எண்ணிக்கையில் பல்வகைத் தானியங்களை, தொங்கும் குலைகளைக் கொண்ட கிளையில்லாத மரங்களை, மேலும் திராட்சை, ஒலிவம், மற்றும் மாதுளைத் தோட்டங்களை; ஒரே மாதிரியானதாயினும், மாறுபட்ட பழங்களை நாம் உற்பத்தி செய்கின் றோம். அவற்றின் பழங்களை, அவைகள் வளர்ந்து பழமாகும் போது கவனியுங்கள். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை அத்தாட்சிகளாகும்.
[6:98] அவர் உங்களை ஒரு மனிதரில் இருந்து துவக்கினார். மேலும் உங்களுடைய பாதை யையும், அப்படியே உங்களுடைய இறுதி விதியையும் தீர்மானித்தார். புரிந்து கொள்ளும் மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடு களைத் தெளிவாக்குகின்றோம்.
[6:100] இருப்பினும், அவர்கள் கடவுள்-உடன் ஜின்களையும் இணைத்தெய்வங்களாக அமைத்துக்கொள்கின்றனர். ஆயினும் அவற்றையும் அவரே படைத்துள்ளார். எந்த அறிவும் இல்லாது அவர்கள், அவருக்கு மகன்களையும், மகள்களையும் கூட இட்டுக்கட்டுகின்றார்கள். அவரே போற்று தலுக்குரியவர். அவர்கள் இவ்வாறு கூறுவதை விட்டும், அவர் மிக மிக உயர்ந்தவர்.