குர்ஆன் 6:100 — கால்நடை
இருப்பினும், அவர்கள் கடவுள்-உடன் ஜின்களையும் இணைத்தெய்வங்களாக அமைத்துக்கொள்கின்றனர். ஆயினும் அவற்றையும் அவரே படைத்துள்ளார். எந்த அறிவும் இல்லாது அவர்கள், அவருக்கு மகன்களையும், மகள்களையும் கூட இட்டுக்கட்டுகின்றார்கள். அவரே போற்று தலுக்குரியவர். அவர்கள் இவ்வாறு கூறுவதை விட்டும், அவர் மிக மிக உயர்ந்தவர்.
[6:99] அவர்தான் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குகின்றார், அதன் மூலம் நாம் எல்லா வகையான தாவரங்களையும் உற்பத்தி செய்கின்றோம். பசுமையான பொருட்களி லிருந்து அதிக எண்ணிக்கையில் பல்வகைத் தானியங்களை, தொங்கும் குலைகளைக் கொண்ட கிளையில்லாத மரங்களை, மேலும் திராட்சை, ஒலிவம், மற்றும் மாதுளைத் தோட்டங்களை; ஒரே மாதிரியானதாயினும், மாறுபட்ட பழங்களை நாம் உற்பத்தி செய்கின் றோம். அவற்றின் பழங்களை, அவைகள் வளர்ந்து பழமாகும் போது கவனியுங்கள். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை அத்தாட்சிகளாகும்.
[6:101] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். அவருக்கு ஒருபோதும் ஒரு ஜோடிஇல்லாத போது எப்படி அவர் ஒரு மகனைப் பெற்றிருக்க இயலும்? அவர் எல்லாப் பொருட்களையும் படைத்தார், மேலும் அவர் எல்லாப் பொருட்களையும் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.