குர்ஆன் 6:101 — கால்நடை
வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். அவருக்கு ஒருபோதும் ஒரு ஜோடிஇல்லாத போது எப்படி அவர் ஒரு மகனைப் பெற்றிருக்க இயலும்? அவர் எல்லாப் பொருட்களையும் படைத்தார், மேலும் அவர் எல்லாப் பொருட்களையும் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.
[6:100] இருப்பினும், அவர்கள் கடவுள்-உடன் ஜின்களையும் இணைத்தெய்வங்களாக அமைத்துக்கொள்கின்றனர். ஆயினும் அவற்றையும் அவரே படைத்துள்ளார். எந்த அறிவும் இல்லாது அவர்கள், அவருக்கு மகன்களையும், மகள்களையும் கூட இட்டுக்கட்டுகின்றார்கள். அவரே போற்று தலுக்குரியவர். அவர்கள் இவ்வாறு கூறுவதை விட்டும், அவர் மிக மிக உயர்ந்தவர்.
[6:102] உங்களுடைய இரட்சகராகிய கடவுள் இத்தகையவர், அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, அனைத்துப் பொருட்களின் படைப் பாளர். நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். அனைத்துப் பொருட்களும் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.