குர்ஆன் 6:102 — கால்நடை
உங்களுடைய இரட்சகராகிய கடவுள் இத்தகையவர், அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, அனைத்துப் பொருட்களின் படைப் பாளர். நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். அனைத்துப் பொருட்களும் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
[6:101] வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். அவருக்கு ஒருபோதும் ஒரு ஜோடிஇல்லாத போது எப்படி அவர் ஒரு மகனைப் பெற்றிருக்க இயலும்? அவர் எல்லாப் பொருட்களையும் படைத்தார், மேலும் அவர் எல்லாப் பொருட்களையும் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.
[6:103] பார்வைகள் அவரைச் சூழ்ந்து கொள்ள இயலாது, ஆனால் அவர், எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்திருக்கின்றார். அவர் இரக்க முள்ளவர், நன்கறிந்தவர்.