குர்ஆன் 61:5 — அணிவகுப்பு
மோஸஸ் தன் சமூகத்தாரிடம்,“என் சமூகத்தாரே, நான் உங்களுக்குக் கடவுள்-ன் தூதராக இருக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்த போதிலும், ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர்கள்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் பாதை விலகிச் சென்ற போது, கடவுள் அவர்களுடைய இதயங்களைத் திசை திருப்பி விட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்து வதில்லை.
[61:4] ஒரு சுவற்றின் செங்கற்களைப் போல, ஓர் அணி வகுப்பில் ஒன்றிணைந்து அவர் நிமித்தமாகச் சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிக் கின்றார்.
[61:6] மேரியின் மகனான, இயேசு, “இஸ்ரவேலின் சந்ததியினரே, தோராவை உறுதிப்படுத்து கின்றவராகவும், மேலும் எனக்குப் பின்னர் வர இருக்கின்ற இன்னும் அதிகம் பாராட்டப்பட்ட தாக இருக்கும் (அஹ்மத்) என்ற பெயருடைய ஒரு தூதரைக் குறித்த நற்செய்தியைக் கொண்டு வந்திருப்பவருமாகிய நான், உங்களுக்குக் கடவுள்-ன் தூதர் ஆவேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. பின்னர், தெளிவான சான்றுகளை அவர்களிடம் அவர் காட்டிய போது, அவர்கள், “இது ஆழ்ந்த மாயாஜாலமாகும்” என்று கூறினார்கள்.